×

திருப்பரங்குன்றத்தில் இன்று வைகாசி விசாகம் பக்தர்களின் பாதங்களை காக்க சாலை முழுதும் தேங்காய் நார்

திருப்பரங்குன்றம், ஜூன் 2:முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வைகாசி உற்சவம் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதனைத் தொடர்ந்து. முக்கிய விழாவான வைகாசி விசாகம் இன்று (ஜூன் 2) நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4.30 மணி முதல் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், பால்குடம் மற்றும் காவடி சுமந்து வரும் பக்தர்களின் பாதங்களை வெப்பம் தாக்காமல் இருக்கவும் கோயிலின் பதினாறு கால் மண்டபம் முதல் கோயில் வாசல் வரையிலான சிமென்ட் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தேங்காய் நார் போடப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் கோயில் நிர்வாகம் சார்பில் துணை ஆணையர் சுரேஷ் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் வைகாசி விசாகத்திற்கு வரும் கூடுதல் பக்தர்களை கருத்தில்கொண்டு கோயில் முழுவதும் பேரிகார்டுகள் மற்றும் கம்புகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

The post திருப்பரங்குன்றத்தில் இன்று வைகாசி விசாகம் பக்தர்களின் பாதங்களை காக்க சாலை முழுதும் தேங்காய் நார் appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,Vaikasi Visagam ,Thiruparangunram ,Thiruparangunram Subramaniaswamy Temple ,Lord ,Muruga ,
× RELATED திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி...